கோதுமை யாருக்கெல்லாம் நல்லது? யார் தவிர்க்கலாம்?

உலகம் முழுவதும் பயன்படுத்த கூடிய தானியம், கோதுமை (wheat). ஆசிய நாடுகளில் வெகு பிரபலம். பேக்கிங் உணவுகளுக்கு கோதுமை பயன்படுகிறது. பிரெட், பாஸ்தா, கேக், மஃபின்ஸ் ஆகியவை செய்ய கோதுமையை பயன்படுத்துகிறார்கள். உடலுக்கு நன்மை செய்யும் சத்துகள் நிறைந்துள்ளன. ஆன்டிஆக்ஸிடன்ட், விட்டமின், தாதுக்கள், நார்ச்சத்துகள் ஆகியவை உள்ளன. சிலருக்கு கோதுமையில் உள்ள குளுட்டன் எனும் புரதமும் ஒத்துகொள்ளாது. அந்த சத்தும் கோதுமையில் நிரம்பியுள்ளன. யாருக்கு கோதுமை ஒத்துகொள்ளுமோ அவர்கள் சாப்பிட நன்மைகளைப் பெறலாம்.
மற்ற எல்லா தானியங்களைப் போல கோதுமையும் மாவுச்சத்து நிறைந்தது.
முழுமையான கோதுமையில் நார்ச்சத்து நிறைந்திருக்கும். ரீபைண்ட் கோதுமையில் நார்ச்சத்து நீக்கப்பட்டிருக்கும்.

கோதுமையில் உள்ள நார்ச்சத்துகள் வயிற்றில் சென்று சிறுகுடல், பெருங்குடலில் நல்ல பாக்டீயாக்களை உருவாக்கி செரிமானத்துக்கு உதவும்.

புரத சத்தும் கோதுமையில் நிறைந்துள்ளது. குளுட்டன் எனும் புரதம் இருப்பதால் கோதுமை மாவு ஒட்டும் தன்மை கொண்டதாக இருக்கும். அதேசமயம், இழுப்பதற்கும் எளிமையாகவும் இருக்கும்.

‘செலினியம்’ எனும் சத்தும் விளையும் மண்ணிலிருந்து கிடைக்கும். இது உடலின் இயக்கத்துக்கு உதவும். இந்தியாவில் விளையும் கோதுமைகளில் இச்சத்து இருக்கும்.
மாங்கனீஸ் சத்து கோதுமையில் உள்ளது. அதுபோல பாஸ்பரஸ் எனும் சத்து உடலில் திசுக்கள் வளர உதவி புரிகிறது.

காப்பர் சத்து இருப்பதால் இதயத்துக்கு நல்லது. போலேட் சத்து, விட்டமின் பி9 இருப்பதால் கர்ப்பிணிகளுக்கு நல்லது.

கோதுமையில் உள்ள பைடிக் ஆசிட் சத்து, இரும்புச்சத்து, ஜின்க் ஆகியவை உடலில் கிரகிக்க உதவும். கோதுமையை ஊறவைத்து, முளைகட்ட வைத்து, சாப்பிட்டாலும் நன்மைகளைப் பெறலாம்.

இதில் உள்ள லிக்னன் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் சத்து, பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோயைத் தடுக்க வல்லது.

கரோட்டினாய்ட், லுடீன் எனும் ஆன்டிஆக்ஸிடன்ட் சத்துகள், பழுப்பு கலந்த மஞ்சள் நிறத்தை கோதுமைக்கு தருகிறது. இந்த சத்துகள் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

கோதுமை உமி ப்ரிபயாட்டிக்காக செயல்படும். வயிற்றில் நல்ல பாக்டீரியாக்கள் உருவாக காரணமாக இருக்கும்.

கோதுமை உமியில் உள்ள நார்ச்சத்து செரிக்க தாமதமாகும். அதுபோல மலம் செல்லும் பாதை, மலம் மலக்குடலுக்குள் கடக்க எடுத்துகொள்ளும் நேரம் வேகமாவதால் மலச்சிக்கல் பிரச்னை இருக்காது.

செரிமான பாதையில் ஏற்படும் புற்றுநோய் ‘கோலான் கேன்சர்’ என்பதாகும். நார்ச்சத்து குறைவான உணவுகளைச் சாப்பிடும்போது இந்த புற்றுநோய் வரும் ஆபத்து குறைவு. ஆனால், நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அடிக்கடி உண்ணும்போது இந்த நோய் வராமல் தடுக்க முடியும்.

‘இரிட்டெபிள் பவல் சிண்ட்ரோம்’ என்ற பிரச்னை சாப்பிட்ட உடனே மலம் கழிக்க தோன்றும். இது பெரும்பாலும் அனைவருக்கும் இந்தப் பிரச்னை இருக்கலாம். வயிறு வலி, வயிறு உப்புசம், பேதி, மலச்சிக்கல் ஆகிய தொந்தரவுகளைத் தரும். கவலை, சோர்வு போன்ற மனசார்ந்த பிரச்னைகளாலும் இந்த சிண்ட்ரோம் வரும். நார்ச்சத்து நிறைந்த கோதுமையை சாப்பிடும்போது சிறிது சிறிதாக இந்தப் பிரச்னையிலிருந்து வெளிவரலாம்.

குளுட்டன் அலர்ஜி இருப்பவர்கள் மட்டும் கோதுமையைத் தவிர்க்கலாம். மற்றவர்களுக்கு கோதுமை நன்மையைச் செய்யும்.

கோதுமை மாவு அரைக்க நேரமில்லாதவர்கள், ஆட்டா, சக்கி ஃப்ரெஷ் ஆட்டா என கடைகளில் விற்பதைகூட வாங்கி பயன்படுத்தலாம்.

கோதுமை மாவால் தயாரிக்கப்படும் கோதுமை பிரெட், கோதுமை தோசை, சப்பாத்தி, புல்கா, பூரி, கோதுமை அடை, கோதுமை பணியாரம், கோதுமை சேமியா, கோதுமையிலிருந்து தயாரிக்கப்படும் ரவை, சம்பா ரவை மூலம் உப்புமா, கிச்சடி, இனிப்பு பலகாரங்கள் ஆகிய அனைத்தையும் செய்து சாப்பிடலாம். இவை அனைத்தும் உடலுக்கு பலம் சேர்க்க கூடியவை.

100 கிராம் கோதுமையில்

கலோரிகள் 340
தண்ணீர் 11%
புரதம் 13.2 கி
மாவுச்சத்து 72 கி
சர்க்கரை 0.4கி
நார்ச்சத்து 10.7கி
கொழுப்பு 2.5கி
ஒமேகா 3 0.07 கி
ஒமேகா 6 1.09 கி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *