ஹெல்தியான, சுவையான 11 வகை சேமியா வகைகள்

பிரபல நிகழ்ச்சியில், “என் மனைவிக்கும் எனக்கும் சண்டை வந்தால், கோபத்தில் உப்புமா செய்துவிட்டு சட்னியை செய்யாமல் விட்டுவிடுவார்” என ஒருவர் நகைச்சுவையாக நிகழ்ச்சியில் சொன்னார். அந்த அளவுக்கு உப்புமா என்றாலே அனைவருக்கும் பயம், வெறுப்பு. உண்மையில், உப்புமா உடலுக்கு நன்மைதான். அதை செய்யத் தெரிவதில்தான் திறமை மறைந்திருக்கிறது. சேமியா உப்புமாவும் ரவா உப்புமாவும் உடலுக்கு நன்மைகளைத் தருகின்றன. சேமியா உப்புமா, ரவா உப்புமாவை சரியாக, முறையாக செய்து சாப்பிட்டால் அதன் சுவையே தனிதான். சுவையான, பல வெரைட்டிகளில் சேமியா வகைகள் கிடைக்கின்றன. அதுவும் இப்போது அணில் ஃபுட்ஸின் புதிய சிறுதானிய சேமியா வகைகள் சுவையுடன் ஆரோக்கியத்தையும் தருகின்றன. அதன் வகைகளைப் பற்றிப் பார்ப்போமா…

தினை சேமியா

உடனடியாக எனர்ஜியைத் தரும்.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராகப் பராமரிக்கும்.
கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும்.
நரம்பு மண்டலம் சீராகச் செயல்படும்.
இதயம் தொடர்பான பிரச்னைகள் வராமல் தடுக்கும்.

கம்பு சேமியா

செரிமானப் பிரச்னைகளைப் போக்கும்.
கெட்ட கொழுப்பைக் குறைக்கும்.
எலும்புகளுக்குப் பலம் சேர்க்கும்.
இன்சுலின் சுரப்புச் சீராகும்.
மெக்னிசியம் இருப்பதால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.

வரகு சேமியா

நார்ச்சத்துகள் உள்ளதால் செரிமானம் எளிதாகும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
மூட்டு வலியைக் குறைக்கும்.
நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
சர்க்கரைநோயாளிகளுக்கு நல்லது.

கார்ன் சேமியா

உடல்பருமனைக் குறைக்க உதவும்.
ஆன்டிஆக்ஸிடன்ட் இருப்பதால், புற்றுநோய் வருவது தடுக்கப்படும்.
மெதுவாக செரிமானம் நடப்பதால், சர்க்கரைநோயாளிகளுக்கு நல்லது.
வயிறு பிரச்னைகள் வராமல் தடுக்கும்.
மலச்சிக்கலைத் தீர்க்கும்.

வீட் சேமியா

திடமான உணவாக இருக்கும்.
நீண்ட நேரம் பசி தாங்கும்.
வளர்சிதை மாற்றத்தை சீராக்கும்.
மூட்டு வலியின் தீவிரம் குறையும்.
உடற்பயிற்சி செய்பவர்களுக்கு மிகவும் நல்லது.

ராகி சேமியா

கால்சியம் நிறைந்துள்ளதால் எலும்புகளுக்கு நல்லது.
இரும்புச்சத்து இருப்பதால் ரத்தசோகை நீங்கும்.
உடல் எடையைக் குறைக்க உதவும்.
மூப்படைதல் தாமதமாகும்.
சர்க்கரைநோயைக் கட்டுக்குள் வைக்கும்.

ரோஸ்டட் சேமியா

குறைவான கொழுப்பு, நிறைவான ஆரோக்கியம்.
நன்கு சாப்பிட்ட உணர்வைத் தரும்.
உடனடி ஆற்றலைத் தரக்கூடியது.
வயிற்றுக்கு நல்லது.
காய்கறிகள், தேங்காய் சட்னியுடன் சாப்பிடும்போது சமச்சீரான சத்துகள் கிடைக்கும்.
உயர் ரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால் இருப்பவர்களுக்கு நல்லது.

லெமன் சேமியா

நிமிடங்களில் தயாராகும் ஹெல்த்தி உணவு.
விட்டமின் சி, பி6, பொட்டாசியம், மெக்னிசியம் நிறைந்துள்ளன.
செரிமானத்துக்கு உதவும்.
வயிறு பிரச்னைகள் வராமல் தடுக்கும்.
நச்சுகள் வெளியேறும்.
ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு நல்லது.

டாமரிண்ட் சேமியா

புளிப்பும் இனிப்பும் கலந்த சுவையான உணவு.
செரிமானத்தை வேகப்படுத்தும்.
இரும்புச்சத்து இருப்பதால் RBC செல்கள் உற்பத்தியாக உதவும்.
தியாமின், விட்டமின் பி காம்ப்ளக்ஸ் போன்றவை நரம்புகளின் இயக்கத்தைச் சீராக்கும்.
விட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட் இருப்பதால் நோய் எதிர்ப்பு திறன் கிடைக்கும்.

ரைஸ் சேமியா

குறைவான கொழுப்பு, குளுட்டன் ஃப்ரீ உணவு.
விட்டமின், நியாசின், மாவுச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம் ஆகியவை உள்ளன.
வயிறு நிறைந்த உணர்வைத் தரும்.
புரதம் இருப்பதால் தசை வளர்ச்சிக்கு உதவும்.
அதிக ஆற்றல் தருவதால் சுறுசுறுப்பு கிடைக்கும்.
வளரும் குழந்தைகளுக்கு நல்லது.

பாயாச சேமியா

சுவையான, சத்தான, கிரீமியான ஹெல்த்தி டசர்ட்.
விட்டமின் ஏ, பி12, கால்சியம், மாவுச்சத்து, புரதம், மெக்னிசியம், பாஸ்பரஸ், செலினியம் ஆகியவை உள்ளன.
இன்ஸ்டன்ட் எனர்ஜி கிடைக்கும்.
இரைப்பைப் பிரச்னைகளைப் போக்கும்.
அதிக கொலஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு நல்லது.
வீட்டில் தயாரிக்கும் பாயாசத்துக்கு சுவையே தனி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *