சர்க்கரை நோயாளிகளின் பெஸ்ட் உணவு

‘வரகு’ எனக் கடையில் கேட்டு வாங்குபவர்களுக்கு, ஏதோ அவருக்கு உடலில் பிரச்னை என நினைத்துகொள்கிறார்கள். வரகு நோயாளிகள் மட்டும் சாப்பிடுவது அல்ல. அனைவரும் சாப்பிட ஏற்றது. மருத்துவக் குணங்கள் நிறைந்த சிறுதானியங்களின் ஒன்றான வரகு, சர்க்கரை நோய்க்கும் உடல்பருமனானவருக்கும் சிறந்தது.

வரகை ஆன்டிடயாபடிக் எனச் சொல்லலாம். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். புரதம், நார்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன. சர்க்கரை நோயாளிகளுக்கு தேவையான குவர்சிடின், ஃப்யூருலிக் அமிலம் (ferulic acid), பி-ஹைட்ராக்ஸிபென்சாயிக் அமிலம் (p-hydroxybenzoic acid), வானிலிக் அமிலம், சிரஞ்சிக் அமிலம் ஆகியவை வரகில் உள்ளன.

பாலிபீனல்ஸ், ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளதால், கிருமிகள் உடலில் இருந்தால் அவை அழிக்கப்படும்.

நார்ச்சத்து நிறைந்துள்ளதால் எடைக் குறைக்க உதவும். ட்ரைகிளசரைட் அளவு குறைக்கப்பட்டு, உடலில் கொழுப்பு அதிகரிக்காமல் பராமரிக்கும்.

வரகு மிக எளிமையாகச் செரிமானமாகும்.

இதில் உள்ள ‘லெசித்தின்’ நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தும்.

மெனோபாஸ் அடையும் பெண்கள், இதய நோய் உள்ளவர்கள், ரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்கள், அதிக கொலஸ்ட்ராலால் அவதிபடுபவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், பிரச்னையின் வீரியம் குறைந்து கட்டுக்குள் வரும்.

உணவு சாப்பிட்டு சில மணி நேரங்களில், ரத்தத்தில் சர்க்கரை அளவு வேகமாக சேராமல் மெதுவாக சேரும் உணவு, வரகு. வரகு பொங்கல், வரகு கஞ்சி, வரகு உப்புமா, வரகு சேமியா, வரகு பிரியாணி, வரகால் செய்யப்பட்ட உணவுகள் அனைத்தும் சர்க்கரை நோயாளிகளுக்கான சிறந்த உணவு. நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால், அனைவரும் சாப்பிட ஏற்றது. வாரம் நான்கு முறையாவது வரகரிசியால் செய்யப்பட்ட உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்.

வரகை, மூன்று வேளையும் தங்களது உணவில் சேர்த்துக்கொள்ள முடியும். எப்படி என்கிறீர்களா? காலையில், காய்கறிகள் கலந்த வரகு உப்புமா, காய்கறிகள் கலந்த வரகு சேமியா, வரகு இட்லி, வரகு தோசை, வரகு அடை.

மதியம்: வரகு புதினா சாதம், வரகு வெந்தய சாதம், வரகு புலாவ், வரகு பிரியாணி, வரகு மாவால் செய்த சப்பாத்தி.
டசர்ட்: வரகு பாயாசம், வரகு கட்லெட், வரகு மில்க் கேசரி
ஸ்நாக்ஸ்: முறுக்கு, பிஸ்கெட்

100 கிராம் வரகில்

புரதம் – 10.6 g
கொழுப்பு – 4.2 g
நார்ச்சத்து – 10.2 g
மாவுச்சத்து – 59.2 g
தாதுக்கள் – 4.4 mg
கால்சியம் – 27 mg
பாஸ்பரஸ் – 188 mg
இரும்புச்சத்து – 0.4 mg
கலோரிகள் – 309 kcal

மிக்ஸட் தால் வரகு சேமியா வொண்டர்

தேவையானவை
அணில் வரகு சேமியா – 200 கிராம்
துவரம் பருப்பு, கடலைப்பருப்பு – தலா 50 கிராம்
சிவப்பு மிளகாய் – 4
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
சீரகம், பெருங்காயம் – ¼ டீஸ்பூன்
தாளிக்க
கடுகு – ½ டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – 15 இலைகள்

செய்முறை
பருப்பு வகைகள் மற்றும் மிளகாயை அரை மணி நேரம் ஊறவிட்டு தண்ணீர் இல்லாமல் கெட்டியாக அரைக்கவும். வாணலியில் தாளிக்கும் பொருள்களைத் தாளித்து, அரைத்த பருப்பைச் சேர்த்து வதக்கி, உப்பு மற்றும் உதிர்த்த அணில் வரகு சேமியாவை சேர்த்து நன்கு கிளறி எடுத்துப் பரிமாறவும்.
தயாரிக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
*மூன்று பேர் சாப்பிடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *