சர்க்கரை நோயாளிகளின் பெஸ்ட் உணவு

‘வரகு’ எனக் கடையில் கேட்டு வாங்குபவர்களுக்கு, ஏதோ அவருக்கு உடலில் பிரச்னை என நினைத்துகொள்கிறார்கள். வரகு நோயாளிகள் மட்டும் சாப்பிடுவது அல்ல. அனைவரும் சாப்பிட ஏற்றது. மருத்துவக் குணங்கள் நிறைந்த சிறுதானியங்களின் ஒன்றான வரகு, சர்க்கரை நோய்க்கும் உடல்பருமனானவருக்கும் சிறந்தது. வரகை ஆன்டிடயாபடிக் எனச் சொல்லலாம். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். புரதம், நார்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன. சர்க்கரை நோயாளிகளுக்கு தேவையான குவர்சிடின், ஃப்யூருலிக் அமிலம் (ferulic acid), பி-ஹைட்ராக்ஸிபென்சாயிக் அமிலம் (p-hydroxybenzoic acid), வானிலிக் அமிலம், சிரஞ்சிக் அமிலம் ஆகியவை வரகில் உள்ளன. பாலிபீனல்ஸ், ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளதால், கிருமிகள் உடலில் இருந்தால் அவை அழிக்கப்படும். நார்ச்சத்து நிறைந்துள்ளதால் எடைக் குறைக்க உதவும். ட்ரைகிளசரைட் அளவு குறைக்கப்பட்டு, உடலில் கொழுப்பு அதிகரிக்காமல் பராமரிக்கும். வரகு மிக எளிமையாகச் செரிமானமாகும். இதில் உள்ள ‘லெசித்தின்’ நரம்பு மண்டலத்தை