ஆரோக்கியம் காக்கும் ஆட்டா ரெசிபி

கோதுமை அரைக்கப்பட்டு மாவாக வருவதை, கோதுமை மாவு / ஆட்டா என்று சொல்லப்படுகிறது. ஆரோக்கியமான முறையில் உடல் எடையைப் பராமரிக்க கோதுமை உதவுவதாக அமிரிக்கன் ஜர்னல் சொல்கிறது. நார்ச்சத்து அதிகமுள்ள உணவு என்பதால், செரிமானம் சீராகும். மலச்சிக்கல் நீங்கும். உடலின் மெட்டபாலிசம் சீராகி, இதயம் தொடர்பான நோய்கள் வராமல் காக்கும். மெக்னிசியம் அதிகம் இருப்பதால், இன்சுலின், குளுக்கோஸ் சுரப்புகள் சீராக இருக்கும். தொடர்ந்து கோதுமை உணவுகளைச் சாப்பிடுவோருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு சீராகப் பராமரிக்கப்படும். பித்தப்பையில் சுரக்கும் பைல் ஆசிட் குறைந்த அளவில் சுரப்பதால், பித்தப்பை கற்கள் உருவாகாது. புற்றுநோய் காரணிகளை எதிர்க்கும்தன்மை கொண்டது. குறிப்பாக உணவுக்குழாய், மார்பக புற்றுநோய், மெனோபாஸ் அடையும் முன் வரும் தொந்தரவுகள் ஆகியவை வராமல் தடுக்கப்படும். இதில் குளுட்டன் அதிகமாக இருக்கும். அதாவது கோதுமை மாவை பிசைந்து இழுத்தால், நாம் இழுக்கும்