உடலுக்கு பலம் சேர்க்கும் அரிசி மாவு

இந்தியாவின் முக்கிய உணவு அரிசி. அன்றாட உணவுப் பட்டியலில் அரிசி முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. அரிசி இல்லாத மதிய உணவு இல்லை. குறிப்பாகத் தமிழ் நாட்டிலே அரிசிதான் பிரதான உணவு. அரிசியில் சோறு, இட்லி, தோசை, பொங்கல், ரவை, கிச்சடி, ஹெல்த் மிக்ஸ், இன்ஸ்டன்ட் மிக்ஸ் என அனைத்திலும் அரிசி கலந்திருக்கும். அரிசியை அரைத்தால் அரிசி மாவு கிடைக்கும். இந்த அரிசி மாவால் பலவகை உணவுகளைச் செய்ய முடியும். கொழுக்கட்டை, இடியாப்பம், புட்டு, இன்ஸ்டன்ட் இட்லி, தோசை போன்ற சிற்றுண்டிகளும் முறுக்கு போன்ற நொறுக்கி தீனிகள்கூட செய்ய முடியும். இந்த அரிசி மாவு சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் சாப்பிட ஏற்றது. புரதம், மாவுச்சத்து அதிகமாக இருப்பதால், வயிறு நிறைந்த உணர்வுத் தரும். குழந்தைகளின் வளர்ச்சிக்குகூட உதவும். கால்சியம், ஜின்க், நார்ச்சத்து ஆகியவையும் உள்ளன.