சோளம்… ஆஹா சொல்ல வைக்கு அற்புத பலன்கள்…

சோள முத்துக்கள் வெறும் முத்துக்கள் அல்ல. அவை அனைத்தும் சத்துகள் நிறைந்த முத்துக்கள். இந்தியாவின் மேற்கு மற்றும் தெற்கு பகுதியில் சோளம் வெகு பிரபலம். சிறுதானிய குடும்பங்களில் சோளமும் ஒன்று. உலகில் ஐந்து சத்துள்ள தானியங்களில் சோளமும் ஒரு வகை. முன்பெல்லாம் விலங்குகளுக்கு உணவாக கொடுத்து வந்தனர். பிறகு சோளம் மனிதர்களின் தட்டிலும் இடம் பிடித்துவிட்டது. அரிசி, கோதுமையைச் சாப்பிட விரும்பாதவர்கள், சோளத்தைச் சாப்பிடலாம். அவற்றைவிட சோளத்தில் சத்துகளும் அதிகம். இதில் குளுட்டன் சிறிதும் இல்லை. சோளம் ஆரோக்கியத்தின் அடையாளம். கோதுமை, பார்லி உணவுகளில் இருக்கும் குளூட்டன் செரிமான பிரச்னை, வாயுத் தொல்லைகள், வயிறு வலி, வயிற்றுப் பிடிப்பு ஆகிய பிரச்னைகளை ஏற்படுத்தும். ஆனால் சோளம் போன்ற சிறுதானியங்களில் குளுட்டன் சிறிதும் இல்லை. அனைவரும் சாப்பிட ஏற்றது. செல்கள் உருவாக, சீராக வேலை செய்ய புரதம் தேவை.