GIST Mitr

வியாபாரிகள் மற்றும் விநியோகஸ்தரர்களின் நலனுக்காக அணில் குழுமம் நடத்திய ஜி.எஸ்.டி MITR திட்டம்

திண்டுக்கல்லில் உள்ள பாரம்பரியம் மிக்க அணில் நிறுவனம், சேமியா தயாரிப்பில் முன்னணியில் உள்ளது. சேமியாவில் வெரைட்டிகளை வைத்திருக்கும் முதல் நிறுவனம் இதுதான். தற்போது அறிமுகப்படுத்த ஜி.எஸ்.டி வரி குறித்துப் பலருக்கும் பல சந்தேகங்களும் குழப்பங்களும் உருவாகியுள்ளன. ஜி.எஸ்.டி வரியின் முக்கியத்துவம் என்ன, ஏன், எதற்கு, நமக்கு இது சரியா, தவறா எனப் பல கேள்விகளுக்குப் பதில் தெரியாமல் இருக்கிறோம். இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதிலாக வந்ததுதான் ஜி.எஸ்.டி MITR என்ற விழிப்புணர்வு திட்டம்.
மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்த நிலையில் , அணில் சேமியா குழுமம் தங்களது விநியோகஸ்தரர்கள் மற்றும் விற்பனையாளர்கள் ஆகியோருக்கு விழிப்புணர்வு திட்டம் அமைத்து, ஜி.எஸ்.டியை பற்றித் தெளிவான முறையில் விளக்கம் அளித்து, அதனுடன் இவர்களுக்கு ஜி.எஸ்.டி எண்களை இலவசமாகப் பதிவு செய்தும் கொடுக்கப்பட்டது. ஜி.எஸ்.டி MITR மூலம் விற்பனையாளர்களுக்கும், விநியோகஸ்தரர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, விற்பனையில் உள்ள கணக்கியல், வரி நடைமுறை, வரி சார்ந்த தகவல்கள் போன்ற விளக்கங்களும் தரப்பட்டன.
ஜி.எஸ்.டி MITR திட்டத்தில் பேசிய நிர்வாக இயக்குனரான திரு.கமலஹாசன் அவர்கள், ‘’ அணில் நிறுவனத்தின் உணவுகள் தரமானவை. சேமியாவில் வெரைட்டிகளை வைத்திருக்கும் முதல் நிறுவனம் இதுதான். சுவையில், பதத்தில், தரத்தில் போன்ற அனைத்துக்கும் முக்கியத்துவம் அளித்து நியாயமான விலையில் அணில் உணவுகளை விற்கிறோம். அனைவருக்கும் அணில் உணவுகள் சேரவேண்டும்; அனைவரும் பயன்பட வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். தற்போது ஜி.எஸ்.டி வரி மூலம் குழப்பத்தில் இருப்போரை தெளிவுப்படுத்தவே இந்த ஜி.எஸ்.டி MITR திட்டத்தைத் தொடங்கினோம்’’ என்றார்.
இவரைத் தொடர்ந்து அணில் நிறுவனத்தின் செயல் இயக்குனரான திரு.சுகுமார் அவர்கள் பேசுகையில், ” அணில் குழுமம் என்றைக்கும் விற்பனையாளர்களுக்கும் விநியோகஸ்தரர்களுக்கும் ஆதரவு அளித்து வந்திருக்கிறது. அதுபோல அவர்களும் அணில் குழுமத்துக்கு ஆதரவு அளித்து வந்தனர். அதனால் ஜி.எஸ்.டி வரி குறித்து விழுப்புணர்வு ஏற்படுத்துவதால் எங்களின் விற்பனையாளர்களுக்கும் விநியோகஸ்தரர்களுக்கும் இத்திட்டம் பயன்படும் என்பது எங்களின் அசைக்க முடியாத நம்பிக்கை’’ என்று முடித்தார்.
அணில் குழுமம் தரத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருமோ அதே முக்கியத்துவம் தங்களது விற்பனையாளர்கள் மற்றும் விநியோகஸ்தரர்களுக்கும் தரும் என்பது இந்த ஜி.எஸ்.டி MITR திட்டத்திலிருந்து தெளிவாகிறது.

News Callender