ஹெல்தியான, சுவையான 11 வகை சேமியா வகைகள்

பிரபல நிகழ்ச்சியில், “என் மனைவிக்கும் எனக்கும் சண்டை வந்தால், கோபத்தில் உப்புமா செய்துவிட்டு சட்னியை செய்யாமல் விட்டுவிடுவார்” என ஒருவர் நகைச்சுவையாக நிகழ்ச்சியில் சொன்னார். அந்த அளவுக்கு உப்புமா என்றாலே அனைவருக்கும் பயம், வெறுப்பு. உண்மையில், உப்புமா உடலுக்கு நன்மைதான். அதை செய்யத் தெரிவதில்தான் திறமை மறைந்திருக்கிறது. சேமியா உப்புமாவும் ரவா உப்புமாவும் உடலுக்கு நன்மைகளைத் தருகின்றன. சேமியா உப்புமா, ரவா உப்புமாவை சரியாக, முறையாக செய்து சாப்பிட்டால் அதன் சுவையே தனிதான். சுவையான, பல வெரைட்டிகளில் சேமியா வகைகள் கிடைக்கின்றன. அதுவும் இப்போது அணில் ஃபுட்ஸின் புதிய சிறுதானிய சேமியா வகைகள் சுவையுடன் ஆரோக்கியத்தையும் தருகின்றன. அதன் வகைகளைப் பற்றிப் பார்ப்போமா… தினை சேமியா உடனடியாக எனர்ஜியைத் தரும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராகப் பராமரிக்கும். கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும். நரம்பு மண்டலம் சீராகச் செயல்படும்.